மே 9ல் ரிலீசாகிறது கல்கி 2898 ஏடி

ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில், சி. அஸ்வனி தத் சார்பில் வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வழங்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சாஸ்வத சட்டர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டே பிரபாஸின் நடிப்பில் கல்கி திரைப்படம் தயாராகுவது உறுதி செய்யப்பட்டாலும், அடுத்தடுத்து கொரோனா உள்பட பல காரணங்களால் அவை தள்ளிப்போய், கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் கல்கி திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டும். இந்நிலையில், படம் வரும் மே 9, 2024 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நடிகர் அமிதாப்பச்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘6000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த கதை, மே 9, 2024 அன்று தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

The post மே 9ல் ரிலீசாகிறது கல்கி 2898 ஏடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: