25ம் தேதி வருகிறது சிங்கப்பூர் சலூன்

சென்னை: ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. திரைக்கு வந்த ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கி இருந்த கோகுல், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆர்ஜே பாலாஜி சிகையலங்கார நிபுணர் வேடத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். முக்கிய வேடங்களில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், இப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

The post 25ம் தேதி வருகிறது சிங்கப்பூர் சலூன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: