மோடி தலைமையிலான இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை!: அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிருப்தி..!!

வாஷிங்டன்: மோடி தலைமையிலான இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை என்பது பெரும்பாலான அமெரிக்கவாழ் இந்தியர்களின் கருத்தாக உள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. யுகோக் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கவாழ் இந்தியர்களில் 39 சதவீதம் பேர் இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 36 சதவீதம் பேர் இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்றவர்களில் 5ல் ஒரு பங்கினர் கருத்து எதுவும் கூறவிரும்பாதவர்கள். கடந்த 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த போது அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக மோடி அரசு உறுதி அளித்தது. ஆனால் இந்து பெரும்பான்மை ஆதரவு விமர்சனத்திற்கு இலக்கானது. இந்தியாவில் ஊழல் பெரும் சவாலாக இருக்கும் என்று அமெரிக்கவாழ் இந்தியர்களில் 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 15 சதவீதம் பேர் பொருளாதாரம் என்றும் மத பெரும்பான்மை அச்சுறுத்தல் மிக முக்கிய சவால் என்றும் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் பிரதமரான மோடிக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 32 சதவீதம் பேர் மோடி இந்திய பிரதமராக இருப்பதை எதிர்க்கிறார்கள். எஞ்சியவர்கள் கருத்து கூறவிரும்பாதவர்கள். ஹூஸ்டனில் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியின் போது விழாக்கோலமாக வரவேற்பு அளித்த அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஆனால் அவர்கள் மத்தியில் தற்போது மோடி அரசுக்கு செல்வாக்கு குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. …

The post மோடி தலைமையிலான இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் செல்லவில்லை!: அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: