கோவின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் திருத்தம் செய்யலாம்

சென்னை: கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், கோவின் செயலியில் புதிய மாற்றம் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவின் செயலியில் பயனாளிகளே, அந்த திருத்தங்ளை செய்துகொள்ளலாம். அவ்வாறு இயலாதபட்சத்தில் மாநில சுகாதாரத் துறையை அணுகலாம். மாநில பொது சுகாதாரத்துறை அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.முதல் தவணை தடுப்பூசிக்கான சான்றுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவாகியிருந்தால், அதனை ஒரே சான்றிதழாக இணைக்கலாம். தடுப்பூசி செலுத்திய தேதியில் தவறு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளலாம். கைப்பேசி எண்களை மாற்றலாம். தெரியாத நபரின் சான்றிதழ்கள் மற்றொருவரின் எண்ணில் பதிவாகியிருந்தால், அதனை நீக்கலாம். இவ்வாறாக பல்வேறு வசதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன. கோவின் செயலியில் சென்று ரைஸ் யேன் இஷ்ய்யூ என்ற தெரிவை தேர்வு செய்து தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் 104 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்….

The post கோவின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் திருத்தம் செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: