கோவை அருகே வனத்துறை அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து தாகம் தணித்த காட்டுயானை கூட்டம்

பெ.நா.பாளையம் :  கோவை சின்னதடாகம் அடுத்துள்ள வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கரை கீழ்பதி பகுதியில் வனத்துறையினர் அமைத்துள்ள தண்ணீர் தொட்டியில் 2  குட்டி யானைகள் உள்ளிட்ட காட்டு யானைகள் தண்ணீர் குடித்துச் சென்றன.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், ஆனைகட்டி, மாங்கரை உள்ளிட்ட வன பகுதிகளில்  காட்டு யானைகள் அதிகமாக வசிக்கின்றன. இவை கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம். இதனால் விவசாய பயிர்கள் சேதமடைவதும், மனிதர்களை தாக்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் வனத்துறை சார்பில் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் அமைத்து அதில் நீர் நிரப்பி வருகின்றனர்.உணவுகளுக்காக வனப்பகுதிகளிலேயே யானைகளுக்கான பயிர் விதைகளை விதைத்து வருகின்றனர். வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கரை கீழ்பதி பகுதியில் கோவை வனத்துறையினர் மிகப்பெரிய  தண்ணீர் தொட்டி கட்டி அதில் நீர் நிரப்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த 2 குட்டி உள்ளிட்ட 5 காட்டு யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து சிறிது நேரம் விளையாடி சென்றன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த காட்சிகளை தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர்….

The post கோவை அருகே வனத்துறை அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து தாகம் தணித்த காட்டுயானை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: