23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்த சசிகலா… பிரம்மாண்ட பழ மாலை அணிவித்து.. ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் வரவேற்பு!!

சென்னை : பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்த சசிகலா, அதிகாலை 4.30 மணிக்கு ராமபுரம் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேற்று காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, வழிநெடுகிலும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடக்கவே பிற்பகல் ஆகி விட்டது. தொடர்ந்து வழிநெடுகிலும் தொண்டர்கள் குவிந்து இருந்து வரவேற்பு அளித்ததால் சசிகலாவின் வாகனம் ஊர்ந்து வந்தது. நள்ளிரவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடி அருகே  வந்தடைந்தார். அப்போது அவரது வாகனத்தை மட்டும் அனுமதித்த போலீசார், பின்னால் வந்த அமமுகவினர் வாகனங்களை மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போலீசாருக்கும் அமமுகவினருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது. வழிநெடுகிலும் நின்று இருந்த தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற சசிகலா, சரியாக அதிகாலை 4.00 மணிக்கு சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட ஆப்பிள், சாத்துக்குடி, பைன் ஆப்பிள் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலை மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமாவரத்தில் எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சசிகலா திநகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டை வந்தடைந்தார்….

The post 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்த சசிகலா… பிரம்மாண்ட பழ மாலை அணிவித்து.. ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் வரவேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: