திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கிறது. தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதுவரை 60 லட்சம் பேர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. 24 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு வியாதியும் உள்ளது. 12.10 லட்சம் பேருக்கு நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து இருக்கிறது. நிறைய பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்தில் 92% என்கிற அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியால் தான் மூன்றாவது அலையில் இறப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 1.37 கோடி பேர் 2வது தடுப்பூசி போடவில்லை. 44 லட்சம் பேர் முதல் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். வாரந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம் இனி நடக்காது. அதற்கு பதில் அனைத்து சுகாதார நிலையங்களிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். …
The post கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் இனி கிடையாது: சுகாதார துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.
