வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்பு

தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் தெருவில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா தலைமை தாங்கினார். இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், நிலைக்குழு தலைவர் சர்பஜெபதாஸ் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று, தமிழக அரசின் பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதும், நிதி நெருக்கடியை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து, தற்போது இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவித்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழகத்தை போற்றக்கூடிய வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். உயர்படிப்புகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வரும் திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழகத்துக்கு மத்திய அரசு ₹20 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்காமல், தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறது. பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து உள்ளாட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை திட்டங்களையும் அறிவித்துள்ளது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் தினந்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கனிமொழி பேசினார்.இக்கூட்டத்தில் 4 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ், மாணவரணி கோவிந்தசாமி, வட்ட செயலாளர்கள் இரா.பாலன், கௌரீஸ்வரன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: