அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி கிருஷ்ணசாமி(திமுக) பேசுகையில், “பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்றார். இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 1 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரியும், 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளதாகவும்,இது தவிர தொழில்நுட்பக் கல்லூரிகள், பல வகை தொழிநுட்பக் கல்லூரிகளும் உள்ளது.மேலும், பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது. எனவே அரசுக்கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தும், பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளைத் தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றார்….

The post அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: