போராட்டத்திற்கு அவசியம் இருக்காது முதல்வர் மு.க.ஸ்டாலின் 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்று தருவார்: பாமக செயற்குழுவில் ராமதாஸ் நம்பிக்கை

சென்னை: பாமக  சார்பில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு குறித்து அவசர செயற்குழு  கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை  வகித்தார். இதில், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சி  நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.50% உள்  ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் செல்லாது என்று  ஐகோர்ட் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பு சமூகநீதிக்கு ஏற்பட்ட பெரும்  பின்னடைவு. இதை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். கல்வி  மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் எந்த அளவுக்கு  பின்தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த கூடுதல் புள்ளி விவரங்களை  திரட்டி, புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு மீண்டும் உள்  இடஒதுக்கீடு வழங்க முடியும். முதலிடத்தில் உள்ளன. வன்னியர்களால் கல்வி பெற  முடியவில்லை; கடுமையாக உழைத்து ஈட்டும் வருவாயில் கூட பெரும் பகுதியை  மதுவுக்காக செலவிடுவதால் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதனால் தான்,  வன்னியர்கள் இட ஒதுக்கீடு சாதி சார்ந்தது அல்ல, தமிழகத்தின் வளர்ச்சி  பிரச்னை. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.பின்னர், செயற்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:10.5%  உள் இடஒதுக்கீடு பெறுவதற்கு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று  நினைக்கிறேன். அம்பா சங்கர் ஆணையத்தில் இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டிற்கும்,  வன்னியர்களுக்கும் எதிரானவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பைவிட  தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நான் போராட்டம் அறிவிக்க மாட்டேன்.  முதல்வர் ஸ்டாலின் இதை விரைவில் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை  இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஒ‌சி பிரிவில்  வன்னியர்கள் எத்தனை சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர் என்ற புள்ளி விவரங்களை  எடுத்து பார்த்தால் போதும், வன்னியர்கள் பாதிக்கப்படுவது முதல்வர்  ஸ்டாலினுக்கு தெரிந்துவிடும். இவ்வாறு பேசினார்.அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதி குழுபாமக செயற்குழு தீர்மானத்தில், தமிழ்நாட்டில்  வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  தொடர்பான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. தமிழ்நாடு  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் அந்த புள்ளி விவரங்களை தொகுத்து,  ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதன் அடிப்படையில் புதிய வன்னியர் இட  ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து வலியுறுத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதி குழு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது….

The post போராட்டத்திற்கு அவசியம் இருக்காது முதல்வர் மு.க.ஸ்டாலின் 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்று தருவார்: பாமக செயற்குழுவில் ராமதாஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: