கோத்தகிரி அருகே 2 சிறுத்தைகள் பலி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடு பிரிவு 3வது காப்பு காட்டிற்குள் நேற்று வனத்துறையினர் வழக்கமான ரோந்து மேற்கொண்டு இருந்தனர். அப்போது 2 சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட வன உயராதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரகர் சிவா தலைமையிலான வனத்துறையினர் மற்றும் முதுமலை வன கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், ராஜன் ஆகியோர் வனவிலங்கு சமூக அமைப்புகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் ஆய்விற்காக முக்கிய உறுப்புகள் சேகரிப்பட்ட பின்னர் இறந்த சிறுத்தைகளின் உடல்கள் அந்த இடத்திலேயே தீயிட்டு எரியூட்டப்பட்டது. சிறுத்தைகள் இறந்தற்கான காரணம் பிரேத பரிசோதனை ஆய்வின் முடிவில் பின்னரே தெரியவரும் வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post கோத்தகிரி அருகே 2 சிறுத்தைகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: