பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 70 கோடியில் ரோப் கார் அமைக்கும் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் (விடுதலை சிறுத்தைகள்) பேசும்போது, ‘‘காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள திருமுட்டம் பேரூரில் பூவராகசுவாமிகள் ஆலயம் இருக்கிறது. அங்குள்ள பீடம் சேதமடைந்துள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோயிலில் திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.இதற்கு பதில் அளித்து இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ‘‘இன்னும் இரண்டொரு நாட்களில் ஆணையர் அனுமதியை பெற்றவுடன், உடனடியாக அதற்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு வெகுவிரைவில், அடுத்த மாத இறுதிக்குள் உங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தருவார்” என்றார்.ஐ.பி.செந்தில்குமார் (திமுக): பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு இரண்டாவது ரோப் கார் திட்டத்தை முடித்து பக்தர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என்பது வெறும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்ற திருக்கோயிலாக மட்டுமல்லாமல், அங்கு மனநலம் குன்றியவர்களுக்கு முழுநேர அன்னதான திட்டம், மலை ஏறுபவர்களுக்கு மருத்துவமனை வசதி, கல்லூரி, பள்ளி என சமுதாய பணிகளும் கோயில் சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலத்தில் ₹70 கோடிக்கு டெண்டர் எடுத்தவர், என்ன காரணமோ 2016க்கு பிறகு 2021ம் ஆண்டு வரை அந்த பணியை தொடங்கவில்லை. அந்த கோயிலுக்கு நான் 5 முறை ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். தற்போதுதான் அந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 2024ம் ஆண்டிற்குள் ரோப் கார் வசதி பக்தர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.எம்எல்ஏவுக்காக நிச்சயம் ரோப் கார் வசதிதிருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) சட்டப்பேரவையில் நேற்று பேசும்போது, திருச்சி உச்சி பிள்ளையார் மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்றார்.அமைச்சர்  சேகர்பாபு: தேர்தல் அறிக்கையில் 5 மலை கோயில்களுக்கு ரோப் கார்  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நிபுணர் குழுவை  நியமித்து, தற்போது திருச்சி உச்சி பிள்ளையார் மலை கோயிலுக்கும்,  திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய 3 கோயில்களுக்கு டெக்னிக்கல் அனுமதி அளித்திருக்கிறது. விரைவில் அதற்குண்டான பணிகள் தொடங்கப்படும். நாங்கள்  திருச்சி மலை கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றபோது, அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, நான் ஆகியோர் ஏறினோம். சட்டமன்ற உறுப்பினரால்  (இனிகோ இருதயராஜ்) ஏற முடியவில்லை. அவருக்காவது நிச்சயம் அந்த மலை  கோயிலுக்கு ரோப் கார் வசதி செய்யப்படும். (அப்போது அவையில் சிரிப்பலை  எழுந்தது)….

The post பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 70 கோடியில் ரோப் கார் அமைக்கும் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: