மதுரவாயல் அருகே உணவு டெலிவரி ஊழியர்கள் போராட்டம்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே உணவு டெலிவரி ஊரியர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரசாந்த் ஜாய் . இவர் நேற்று மதியம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ஊழியர் சின்ராசு உணவை டெலிவரி செய்ய அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது, ஊழியரை மோட்டார் சைக்கிளுடன் உள்ளே அனுமதிக்க காவலாளிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சின்ராசு வாடிக்கையாளருக்கு செல்போன் மூலம் நடந்ததை கூறிவிட்டு. பின்னர், தாங்களே வந்து உணவை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். உடனே செல்போன் இணைப்பை துண்டித்த பிரசாத் சாய் வெளியே வந்து சின்ராசுவை பார்த்து தகாத வார்த்தையில் திட்டியதாகவும், உணவு டெலிவரி செய்ய வந்தால் சரியாக  செய்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று ஒருமையில் பேசி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சின்ராசு சக ஊழியர்களுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அங்கு வந்த சக ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நின்று தகாத வாராத்தையில் பேசிய வாடிக்கையாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று வாடிக்கையாளரிடம் விசாரிக்க சென்ற போது. அவர் வெளியே சென்று விட்டதாக, கூறிய நிலையில் அது தொடர்பாக உரிய  விசாரணை செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர். ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post மதுரவாயல் அருகே உணவு டெலிவரி ஊழியர்கள் போராட்டம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: