களியனூர் ஊராட்சி பள்ளியில் மாணவர் மனசு புகார் பெட்டி அறிமுகம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மக்கள் மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிய மாணவரின் மனசு எனும் தலைப்பில் புகார் பெட்டி தலைமை ஆசிரியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 124 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த மாணவர் மனசு எனும் புகார் பெட்டி அமைத்து மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மோகன் காந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதாகை ஒன்று அமைக்கப்பட்டு அதில் மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த பட விளக்கங்களுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் மனசு புகார் பெட்டி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றோருக்கு பெரும் நிம்மதியையும் தந்துள்ளது.  …

The post களியனூர் ஊராட்சி பள்ளியில் மாணவர் மனசு புகார் பெட்டி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: