சென்னை: மாமல்லபுரம் அருகே முதலை பண்ணையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையொட்டி முதலை பண்ணை அமைந்துள்ளது. இந்த, முதலை பண்ணை ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலை பண்ணையாக திகழ்கிறது. இங்கு, நாட்டில் உள்ள பல்வேறு முதலை வகைகளான அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், நீள வாய் முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அமேசான் மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப் பெரிய ராட்சத முதலைகளும் இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணிக்கு மேல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக இங்கு குவிந்தனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த வாகனங்கள் இசிஆர் சாலையொட்டி அணிவகுத்து நிறுத்தப்பட்டதால் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….
The post மாமல்லபுரம் அருகே முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.