உக்ரைன் போரை நியாயப்படுத்த பொய் பிரச்சாரம்: ரஷ்ய அதிபர் புதின் மீது பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு

பாரீஸ்: உக்ரைன் மீதான போரை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு மேற்கொண்டுள்ள பொய் பிரச்சாரத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆலோசனையில் ஈடுபட்டார். நேட்டோ அமைப்பில் பிரான்ஸ் உள்ளிட்ட நிலையில் இரு நாட்டு தலைவர்களும் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்நிலையில் தலைநகர் பாரீஸ் நகரில் நாடு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் புதின் தான் தேர்ந்தெடுத்தார் என்று கூறினார். உக்ரைன் மீதான போரை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு மேற்கொண்டுள்ள பொய் பிரச்சாரத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். விளாதிமிர் புதினுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்த அவர் சர்வதேச சமூகத்தின் முன் கொடுத்த வாக்குறுதியை மீறி வேண்டுமென்றே உக்ரைன் மீது புதின் போரை தொடர்ந்தார் என இம்மானுவேல் மேக்ரான் குற்றம்சாட்டினார். பிரான்ஸின் மதிப்புகளையும், நிலைப்பாட்டையும் தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும் மேக்ரான் கூறினார்.            …

The post உக்ரைன் போரை நியாயப்படுத்த பொய் பிரச்சாரம்: ரஷ்ய அதிபர் புதின் மீது பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: