பொதுப்பணித்துறை சென்னை மண்டலத்தில் தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்க அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் மூலம் நீதித்துறை, வருவாய், போக்குவரத்து, வணிகவரி, மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், அரசு கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கட்டிட பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முதன்மை தலைமை பொறியாளரின் கண்காணிப்பின் கீழ் திருச்சி, மதுரை மண்டல தலைமை பொறியாளர்கள் மூலம் நடந்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், 7 மருத்துவ கட்டுமான வட்டங்களை இணைத்து புதிதாக மருத்துவ கட்டுமானப்பிரிவு தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்கப்படுகிறது. அதே போன்று, திட்டம் மற்றும் வடிவமைப்பு மூலம் பல்வேறு கட்டிடங்களுக்கு ஸ்டெக்சுரல் வடிவமைப்பை மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பு பொறியாளரின் தலைமையில் நடந்து வந்தது. இந்த பணியிடத்துக்காக தற்ேபாது தலைமை பொறியாளர் பணியிடங்களாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு திட்டப்பணிகளுக்கான வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கட்டுமான பிரிவில் சென்னை மண்டல கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் பணியிடம் முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர், நிர்வாக பணிகளை கவனித்து வருவதால் சென்னையில் நடக்கும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, தற்போது புதிதாக சென்னை மண்டல கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. தற்போது கண்காணிப்பு பொறியாளர்கள் கல்யாணசுந்தரம், காசிராஜன், சத்தியமூர்த்தி, ராஜசேகர் ஆகியோர் தலைமை பொறியாளர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இந்த புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் அவர்களை பணியமர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post பொதுப்பணித்துறை சென்னை மண்டலத்தில் தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்க அரசுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: