பாலியல் தொழிலாளியாக அலியா பட் நடிக்கிறார்

மும்பை: பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மும்பையிலுள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக அலியா பட் கூறியுள்ளார். கங்குபாய் கத்தியவாடி இந்தி படத்தில் அலியா பட் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 25ம் தேதி ரிலீசாகிறது. இதில் பாலியல் தொழிலாளியாக அலியா பட் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘நிஜமாக நடந்த சம்பவத்தைதான் படமாக்கியுள்ளோம். இதில் யதார்த்தம் மீறாமல் இருப்பதற்காக டைரக்டரின் ஆலோசனைப்படி மும்பையிலுள்ள ரெட்லைட் ஏரியாவுக்கு சென்றேன். அங்குள்ள பெண்களிடம் பேசினேன். அவர்களின் உடை, பாவனைகளை பின்பற்றினேன். படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு பலரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்….

The post பாலியல் தொழிலாளியாக அலியா பட் நடிக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: