ஜனாதிபதி முர்முவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா சந்திப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று தனித்தனியே சந்தித்து பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் போரை அமெரிக்கா நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருவது, பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இருஅவைகளும் தொடர்ந்து முடங்கி உள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரதமரை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனாதிபதி முர்முவை சந்தித்து பேசினார் என ஜனாதிபதி மாளிகையின் எக்ஸ் தளத்தில் செய்தி வௌியாகி உள்ளது.

 

The post ஜனாதிபதி முர்முவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: