இந்நிலையில் இவ்வழக்கில் கைதான வெங்கடேஷ் நாயுடு என்பவரின் மொபைல் போனில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக்கட்டான பணத்தை ஒரு ரகசிய இடத்தில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் நெருங்கிய ஆதரவாளர் வெங்கடேஷ் நாயுடு எண்ணி வைக்கும் வீடியோ இருந்தது. இவ்வழக்கு விசாரணையில் வெங்கடேஷ் நாயுடுவின் வீடியோ ஆதாரங்கள் தற்போது முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் மூலம், மது மோசடி வழக்கில் செவிரெட்டி கும்பல் கையும் களவுமாக பிடிபட்டதாகத் கூறப்படுகிறது.
The post ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம்: வீடியோ ஆதாரம் சிக்கியது appeared first on Dinakaran.
