புழல், ஆக 3: செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு அறிஞர் அண்ணா தெருவில் தொடர் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் புதிதாக சிசிடிவி கேமராக்கள் 14வது வார்டு கவுன்சிலர் இலக்கியன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது. இந்த கேமராக்களை, பேரூராட்சி துணை தலைவர் விப்ர நாராயணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.இந்நிகழ்வில் 18வது வார்டு கவுன்சிலர் கோதண்டராமன், வார்டு செயலாளர் பார்த்திபன், முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் சுதாகர் மற்றும் வாசுதேவன், பூபதி, சுரேஷ், சீனிவாசன், ஜோதி பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post செங்குன்றம் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.
