செய்யாறு, ஆக. 3: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சந்தோஷ்குமார்(29) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் சென்று, திருவிழா நடத்துவதற்காக சில லட்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமத்திற்கு பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு கல்குவாரி நிறுவனத்தினர், ‘இங்கு எத்தனையோ குவாரிகள் உள்ளது. எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள், எல்லோரிடமும் கேளுங்கள்’ எனக்கூறி அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 20 பேர் கொண்ட கிராம மக்கள், தனியார் கம்பெனி எதிரே மண்ணை கொட்டி மண்மேட்டை எழுப்பி மேலாளர் சந்தோஷ்குமாரை தரக்குறைவாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து சந்தோஷ்குமார், தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார், கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post செய்யாறு அருகே கல்குவாரி மேலாளர் மீது தாக்குதல்: கிராம மக்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.
