- கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து
- அர்ஜென்டீனா
- குயிட்டோ
- உருகுவே
- கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டி
- கியூட்டோ, ஈக்வடார்
- தின மலர்
குய்டோ: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டியில் நேற்று, உருகுவே அணியை, பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி, அர்ஜென்டினா அணி, 3ம் இடத்தை பிடித்தது. கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டிகள் ஈகுவடார் நாட்டின் குய்டோ நகரில் நடந்து வருகின்றன. அரை இறுதிப் போட்டி ஒன்றில் கொலம்பியாவிடம் தோற்ற அர்ஜென்டினா அணியும், மற்றொரு அரை இறுதியில் பிரேசிலிடம் தோல்வியை தழுவிய உருகுவே அணியும், நேற்று நடந்த போட்டியில் 3ம் இடத்துக்காக மோதின.
போட்டி துவங்கிய 24வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீராங்கனை அல்டனா கோமெட்டி போட்டியின் முதல் கோலை போட்டார். அதற்கு பதிலடியாக உருகுவே அணியின் எஸ்பரன்ஸா பிஸாரோ 35வது நிமிடத்திலும், அதே அணியின் ஜூலியானா வியரா அல்ஸவட்டா 45வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்து தங்கள் அணியை முன்னிலைப் படுத்தினர்.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், 83வது நிமிடத்தில் அர்ஜனெ்டினாவின் ஃப்ளோரென்சியா போன்ஸெகுண்டோ கோல் போட்டு, போட்டியை சமநிலைப்படுத்தினார். அதன் பின் போட்டி நேரம் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், அர்ஜென்டினா 5 கோல்களையும், உருகுவே 4 கோல்களையும் போட்டனர். அதனால், வெற்றி பெற்ற அர்ஜென்டினா 3ம் இடத்தை பிடித்தது.
The post கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து: விறுவிறுப்பான ஷூட் அவுட்டில் சரசரவென அர்ஜென்டினா கோல் appeared first on Dinakaran.
