×

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 3 வார்டுகளிலிருந்து 803 மனுக்கள்

 

ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் நகராட்சி 8,9,10வது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 803 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 8,9,10 வார்டுகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த முகாமினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் 803 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

The post ஜெயங்கொண்டம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 3 வார்டுகளிலிருந்து 803 மனுக்கள் appeared first on Dinakaran.

Tags : Jayankondam Municipality ,Jayankondam ,Stalin ,Jayankondam Assembly Constituency ,Ariyalur District ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு