இந்தநிலையில், ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை கூறியதாவது: சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர், என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.
The post என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள்: ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி! appeared first on Dinakaran.
