×

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 

ஜெயங்கொண்டம், ஜூலை 30: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் ஆணை படியும், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனதின் முதல்வர் பாலசுப்ரமணியம் செயல்முறைகளின் படியும், அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் ,

ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 6 முதல் ஒன்பதாம் வகுப்பு கையாளும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் அடிப்படை மொழி திறன் மற்றும் கணித அடிப்படை திறனை மேம்படுத்தும் திட்டமான திறன் இயக்க பயிற்சி ஆனது ஜெயங்கொண்டம் வட்டார வளமையத்தில் அளிப்பட்டது.

பயிற்சிளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று துவக்கி வைத்தார். கீழப்பழுவூர் ,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் வானதி பயிற்சியினை பார்வையிட்டு பயிற்சி சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சி தேவி, ஐயப்பன்,

சரவணன், இளையராஜா, தாமோதரன், கார்த்திகேயன், செந்தில், டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சுகன்யா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பயிற்சியில் 46 தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

The post ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Jayankondam Union ,Jayankondam ,State Educational Research and Training Institute ,Keelappazhuvur District Teachers Education and Training Institute ,Principal ,Balasubramaniam ,Ariyalur District ,Principal Education Officer ,Balasubramaniam… ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு