×

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான நாடுகாணி செக்போஸ்டில் அதிரடி சோதனை

கூடலூர் : கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லை நாடுகாணி சோதனை சாவடியில் தமிழக சுகாதாரத்துறையினர் வாகன சோதனை மற்றும் துண்டு பிரசுர விநியோகம் செய்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தமிழக எல்லை நாடுகாணி மற்றும் சோலாடி, தாளூர், பாட்ட வயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட சோதனைச் சாவடி வழியாக வருகின்றனர்.

இந்த சோதனைச்சாவடிகளில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் எச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரம் விநியோகித்து வருகின்றனர்.

மேலும், சாலையோரங்களில் விற்பனையாகும் பழங்கள் காய்கறிகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அணில்கள் வவ்வால் உள்ளிட்ட விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என்றும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

The post கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான நாடுகாணி செக்போஸ்டில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nadukani ,Tamil Nadu border ,Malappuram ,Palakkad ,Tamil Nadu Health Department ,Kerala… ,Tamil Nadu ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு