வந்தவாசி : வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.75 கோடியில் 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கி வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராதா, இளங்கோவன், சுந்தரேசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமு, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம் முத்துக்குமரன், சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருண், தெள்ளார் ராஜா நந்திவர்மன் கல்லூரி தலைவர் முத்து, சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் மணி, இளைஞர் அணி முருகன், நகரச் செயலாளர் காமராஜ், தலைமை ஆசிரியர் மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
The post தெள்ளார் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.
