மதுரை மாநகராட்சி வரி வசூலில் முறைகேடு எதிரொலி 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேரின் ராஜினாமா ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடத்திய திடீர் ஆய்வில் 2022, 2023ல் ரூ.150 கோடி ரூபாய் வரை வரி வசூல் வருவாய் இழப்பு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரையில் நடந்த விசாரணையை தொடர்ந்து, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் ஆகியோர் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்களில் மண்டலம் 1 தலைவர் வாசுகி, மண்டலம் 2 சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3 பாண்டிச்செல்வி, மண்டலம் 4 முகேஷ் சர்மா, மண்டலம் 5 சுவிதா ஆகிய 5 மண்டலத் தலைவர்களுடன், நகரமைப்புக் குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமி என 7 பேர் ராஜினாமாவும் நேற்று ஏற்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனிடம் வழங்கப்பட்டு, இக்கடிதங்கள் பரிசீலித்து ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 5 மண்டலத் தலைவர்கள், இரு குழு தலைவர்கள் இடங்கள் காலியானதாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநகராட்சிக்கான புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

The post மதுரை மாநகராட்சி வரி வசூலில் முறைகேடு எதிரொலி 5 மண்டல தலைவர்கள் உள்பட 7 பேரின் ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: