நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 பேர் வேட்பு மனுத்தாக்கல்: இதுவரையில் 289 பேர் வேட்பு மனுத்தாக்கல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளும், ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, திருமழிசை, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய 8 பேரூராட்சிகளும் உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நாளை 4 ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் போட்டியிட திமுக, அதிமுக, தேமுதிக, பாமக ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சியி என பல்வேறு அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாநகராட்சியில் போட்டியிட 29 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6 நகராட்சிகளில் போட்டியிட 112 பேரும், 8 பேரூராட்சிகளில் போட்டியிட 60 பேர் என நேற்று ஒரே நாளில் 201பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி பதவிக்கு 40 பேரும், நகராட்சி பகுதியில் போட்டியிட்ட 144 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 105 பேர் என மொத்தம் 289 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கலில் ஈடுபட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 பேர் வேட்பு மனுத்தாக்கல்: இதுவரையில் 289 பேர் வேட்பு மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: