புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக துறை தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவின் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி சம்பாதித்ததை செபி ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், 2023 முதல் 2025 வரையிலான அதன் மோசடிகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த நிறுவனம் இந்தியாவில் 2020ல் இருந்து செயல்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை அந்நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளது. சட்டவிரோத லாபத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவதை செபியும், ஒன்றிய அரசு ம் தடுக்காதது ஏன்? அதை எப்படி மீட்கப் போகிறார்கள்?
மோடி ஆட்சியில் அத்தனை அரசு அமைப்புகளும் தோல்வி அடைவதற்காக ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த வரிசையில் செபி, சிறு முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்காமல் நான்கரை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து பெரிய தொகையை எடுத்துச் செல்கிறார்கள் என்ற போது தான் விழித்துள்ளது. இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? இந்த மோசடி பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியுமா? இந்த மோசடியின் முக்கிய காரணகர்த்தா செபி முன்னாள் தலைவர் மாதபி புச்சா? இவ்வாறு அவர் கூறினார்.
The post பங்கு சந்தையில் நான்கரை ஆண்டு அமெரிக்க நிறுவனம் மோசடி தூங்கிக் கொண்டிருந்த செபி: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.
