புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகளை பெற்ற குடும்பங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை தரப்படுகிறது. ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.
