இந்த வழக்கு, கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, ‘‘அரசு தரப்பு சாட்சியான சகாயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஜராகவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘அரசு தரப்பு 37வது சாட்சியான அப்போதைய கலெக்டர் சகாயம், வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். அப்போது அவருக்கு தேவையான பாதுகாப்பை சம்பந்தப்பட்ட போலீசார் வழங்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜூலை 21க்கு தள்ளி வைத்தார்.
The post வீடியோ கான்பரன்சில் சகாயம் சாட்சியம் அளிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
