பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி

 

உடுமலை, ஜூன்30: உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் ஆர். கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான உன்னை அறிந்தால் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இப்பயிற்சியில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி படிகளை எப்படி அணுகுவது,செல்போனில் அடிமையாகி தற்போது மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழி முறைகள்.

புத்தக வாசிப்பால் கிடைக்கும் பயன்கள் போன்றவற்றை தன்னம்பிக்கை பயிற்சியாளர் ரவிகாந்தன் சிறப்பாக வழங்கினார்.  முன்னதாக நூலக வாசகர் வட்ட தலைவர்தேவராஜ் வரவேற்றார்.ஊராட்சி செயலர் ஜெயபிரகாசம் வாழ்த்துரை வழங்கினர்.முடிவில் நூலகர் லட்சுமணசாமி நன்றி கூறினார்.

The post பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னாற்றல் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: