மருத்துவர்களின் தொடர் முயற்சியால், டிராக்கோமா தொற்றை முற்றிலும் அழித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சுவச் பாரத், ஜல் ஜீவன் திட்டங்கள் இந்தியா இந்த நிலையை அடைய உதவி உள்ளன. அமர்நாத் யாத்திரை வரும் 3ம் தேதி தொடங்க உள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் விரைவில் தொடங்குகிறது. இந்த யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த 21ம் தேதி உலக யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. தினந்தோறும் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இந்தியாவின் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி உலகை சுற்றி வருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலனடையும் 95 கோடி இந்தியர்கள்: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.
