இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பீக் நேரத்தில் தண்ணீர் லாரி சாலையில் சென்றதைத் தடுக்க தவறிய 2 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதாவது, பீக் அவர்ஸ் என்று கூறப்படும் காலை 8 – 10 மணி வரை, பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. கனரக வாகனங்களை அனுமதித்ததற்காக செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார் .
அதேபோல், போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில், இன்றைய தினம் காவல் ஆணையர் அருண் கூறியதாவது, காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டார். பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கவும். பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
The post பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.
