மேம்பட்ட வேதியியல் செல் (ACC) பேட்டரி உற்பத்திக்கு தொழில்நுட்ப ஆதரவு அளிக்க இந்தியாவுக்கு உதவுவதே அவர்களின் நோக்கம் என்று ஜப்பான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேட்டரி தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடையவும், பேட்டரி உற்பத்தித் துறையில் இந்தியாவை மேம்படுத்தவும் இந்த விஜயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதில் ஜப்பானிய தொழில்நுட்பம் இந்தியாவிற்கு உதவும்.
ஜப்பான் குழு இந்தியாவுக்கு வருவதன் மூலம், பேட்டரி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைய உதவும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தேவையை பூர்த்தி செய்ய, இந்த தொழில்நுட்பம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் குழு, லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும். இந்தியாவில் பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என கூறப்படுகிறது.
The post பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா வருகிறது ஜப்பான் குழு..!! appeared first on Dinakaran.
