இவர் கடந்த 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றினார். ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது ஒன்றிய தொல்லியல் துறை. அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து ஒன்றிய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர். டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.
The post கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இட மாற்றம்..!! appeared first on Dinakaran.
