டூவீலர் மோதி மூதாட்டி பலி

பழநி, ஜூன் 12: பழநி அருகே பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துசாமி மனைவி சவுண்டம்மாள் (70). இவர் நேற்று பழநி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்ேபாது அவ்வழியே வந்த டூவீலர் சவுண்டம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி ஜிஹெச்சில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சவுண்டம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: