மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.24 கோடி

மதுரை, டிச. 25: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் உப கோயில்களின் நிரந்தர உண்டியல்கள் நேற்று கோயிலின் இணை கமிஷனர் சுரேஷ் தலைமையில், மதுரை கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் திறந்து காணிக்கை கணக்கிடும் பணிகள் நடைபெற்றது. இதன் முடிவில்உண்டியல் ரொக்கமாக ரூ.1 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து, 880 மற்றும் 545 கிராம் தங்கம்.

1875 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் அயல் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 187 இருப்பது தெரியவந்தது. இந்த காணிக்கை கணக்கிடும் பணிகளில் கோயில் கண்காணிப்பாளர்கள், இந்து அறநிலையத்துறை மதுரை தெற்கு மற்றும் வடக்கு சரக ஆய்வர்கள், கோயில், வங்கி பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பேரவையினர் கலந்து கொண்டார்கள்.

 

Related Stories: