பேரையூர், டிச. 25: பேரையூர் அருகே கே.சத்திரப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகன் முத்திராஜா (25). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருடன் தகராறில் ஈடுபட்ட மீனாட்சி தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த முத்துராஜா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
