மதுரை, ஜூன் 12: பாரம்பரிய கட்டிட மறுசீரமைப்பு பணிகளுக்காக, மதுரையில் பதிவுத் துறை அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை (தெற்கு) பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகம் (நிர்வாகம் மற்றும் தணிக்கை) மற்றும் எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை தற்போது 171, அரண்மனைச்சாலை, மதுரை 625001 என்ற முகவரியில் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த இரு அலுவலகங்கள் இயங்கும் பாரம்பரிய கட்டிடத்தினை மறுசீரமைப்பு செய்ய ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மறு சீரமைப்பு பணிகள் உடனடியாக நடைபெற உள்ளது. இதனால்வரும் ஜூன் 16ம் தேதி முதல் இந்த இரு அலுவலகங்களும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதன்படி இந்த அலுவலகங்கள் மதுரையை அடுத்த ஒத்தக்கடை, ராஜகம்பீரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் செயல்படும். மறுசீரமைப்பு பணிகளின் முடிவில் இந்த அலுவலகங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்படும் என, பதிவுத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரையில் சீரமைப்பு பணிகள் பதிவுத்துறை அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம் appeared first on Dinakaran.
