போடி மெட்டு மலைச்சாலையில் அச்சுறுத்தும் ‘மெகா’ பள்ளங்கள்: இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

போடி: போடி மெட்டு மலைச்சாலையில் 12வது கொண்டை ஊசி வளைவு முதல் 16வது கொண்டை ஊசி வளைவு வரை மழையால் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களால், இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் சாலையாக போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்த சாலை முந்தல் மலை அடிவாரத்திலிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் 27 கி.மீ தூரச் சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏலத்தோட்ட விவசாயிகள், தொழிலாளர்களின் வாகனங்கள், இருமாநில அரசு போக்குவரத்து பஸ்கள், கனரக வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், டெம்போக்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதமாக தொடர் மழை பெய்ததால், மலைச்சாலையில் 12வது கொண்டை ஊசி வளைவு முதல் 16வது கொண்டை ஊசி வளைவு வரை பல்வேறு இடங்களில் ‘மெகா’ பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால், வாகனங்களில் வளைவுகளில் திரும்பும்போது, பள்ளங்களில் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் செல்லும் டூவீலர்கள் பலமுறை விபத்தில் சிக்கியுள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, போடிமெட்டு மலைச்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மெகா பள்ளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post போடி மெட்டு மலைச்சாலையில் அச்சுறுத்தும் ‘மெகா’ பள்ளங்கள்: இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: