மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணமா?: தீயாய் பரவும் செய்தி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணம் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷுடன் ஜோடியாக “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் மேகா ஆகாஷ் தமிழில் முதன்முறையாக அறிமுகமாக்கினார். மேலும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ சிம்புவுடன் ஜோடியாக நடித்தார்.

இந்த நிலையில் மேகா ஆகாஷ்க்கு அரசியல்வாதி மகனுடன் திருமணம் என்ற செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மேகா ஆகாஷின் தாயார் கூறுகையில்; இணையதளத்தில் வெளியான செய்திக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேகா ஆகாஷ்க்கு திருமணம் என்றால் அதை நாங்களே முறைப்படி அறிவிப்போம்.

மேகாவுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானதும் நிறைய பேர் தொலைபேசியின் மூலம் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி என மேகா ஆகாஷின் தாயார் மறுக்கிறார்.

 

The post மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணமா?: தீயாய் பரவும் செய்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: