திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என திருவனந்தபுரம் வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.