சிவகங்கை, மே 23: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை சார்பில் www.tnlandsurvey என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை https://tamilnilam.tn.gov.in/citizen/ இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டுவர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை www.eservices.tn.gov.in இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவற்றை அறியலாம். எனவே பொதுமக்கள் நிலஅளவை தொடர்பான விபரங்களைப் பார்வையிட்டுப் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நிலம் செயலி மூலம் நில அளவை தொடர்பான விபரங்களை பெற வாய்ப்பு appeared first on Dinakaran.
