×

மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.8000 திருட்டு

சேலம், மே 23: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள ராக்கிப்பட்டி சேவாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி(64). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாபாரம் முடிந்து கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கடையின் ஒரு பக்க ஷட்டர் உடைந்த நிலையில் இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த 8ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி தங்கமணி ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.8000 திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Thangamani ,Rakipatti Sewampalayam ,Attaiyampatti ,Salem district ,Dinakaran ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ