- Kengavalli
- வேல்முருகன்
- நல்லமுத்து
- புங்க்வாடி
- ஆத்தூர்
- சர்வாய்
- சேலம்-சென்னை நெடுஞ்சாலை
- Duweiler
- சலம்-சென்னை
கெங்கவல்லி, ஜன.7: ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் வேல்முருகன்(35). இவர், சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் சார்வாய் பகுதியில் செயல்படும் தனியார் ஸ்பின்னிங் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு புறப்பட்டார். சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் ஆத்தூர் காந்திபுரம் பகுதியில் சென்றபோது, ஆத்தூரை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகன மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு இடது கை துண்டாகி படுகாயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
