×

300 சவுக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்த விவசாயி

கெங்கவல்லி, ஜன.7: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(51). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி(70) என்பவருக்கும், நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவிந்தராஜ் ஆத்திரத்தில் சின்னசாமி விவசாய தோட்டத்திற்கு சென்று கம்பி வலைகளை சேதப்படுத்தியுள்ளார். மேலும், 300 சவுக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து கோவிந்தராஜை கைது செய்தனர். முன்விரோத தகராறில் 300 சவுக்கு மரக்கன்றுகள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kengavalli ,Govindaraj ,Kattukottai Ayarpadi ,Athur ,Chinnaswamy ,
× RELATED விபத்தில் வாலிபர் கால் துண்டானது