கெங்கவல்லி, ஜன.8: ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பன் மகன் ஜெகன்(31). இவர் குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், அனைவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், அக்கம் பக்கம் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மளிகை பொருட்கள், துணிமணி, டிவி, பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
